கதறி அழுத மணமகன் திகைத்து நின்ற ஆசிரியர் – மாண்புமிகு மாணவன்

0
1512

ஓர் ஆசிரியர் மாணவனின் வாழ்க்கை பயணம்

2005 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன்… அப்போ மேல்ஒலக்கூர் தொடக்கப்பள்ளியில இடைநிலை ஆசிரியர் பணி…இப்போ பள்ளிகுளம் ஜெனங்க மாதிரியே மேல்ஒலக்கூர் ஜெனங்களும் அவுங்க வீட்டு பிள்ளையாவே கொண்டாடிய நேரமது… எனக்கு பள்ளிகுளம் புகுந்தவீடுனா,மேல்ஒலக்கூர் தாய்வீடு.

பணிக்கு வந்த புதுசு வேறயா ரொம்ப வேகம் புதுசுபுதுசா எதையாவது செய்துகிட்டே இருப்பேன். அப்போ ஒருத்தரு தம்பி வாத்தியார் இல்லாம பத்தாவது படிக்கிற பசங்க ரொம்ப கஷ்டப்படராங்க அவுங்களுக்கு முடிஞ்சா டியூசன் மாதிரி எடம்பானு சொன்னாரு, யோசிப்போ அந்த பசங்களுக்கு எதையாவது செய்வோனு தோனிச்சி!

25 பசங்களோட இலவச டியூசன் ஆரம்பிச்சி முதன் முதலாஅந்த கிராமத்துல 400 மேல மதிப்பெண் எடுத்து புது சாதனை பன்னாங்க நம்ம பசங்க அதெல்லாம் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம்.

அந்த டியூசன் சென்டர்க்கு வந்து 439 எடுத்து பள்ளியில முதல் மாணவனா வந்தவன் தான் அகலூர் வெங்கிடேசன், கல் உடைக்கிற தொழில் செய்த அப்பா சின்ன வயசுலே இறந்துவிட வறுமையில இருந்த அவனுக்கு அப்போ சூழலுக்கு என்னோட சக்திக்கு என்ன முடியுமோ அதலாம் செய்தும் சில நல்ல உள்ளங்ககிட்டயும் நன்கொடை வாங்கியும் மேல படிக்க அனுப்பினேன் அவுனும் +2 ல 1100க்கு மேல மார்க் எடுத்து ஆசிரியர் பயிற்சி முடிச்சி, குடும்ப வறுமையின் காரணமா, வேற லைன் மாறி இப்போ சென்னையில ஒரு கம்பியூட்டர் ஷோரூம் வெச்சி இருக்கான்.

அவுனுக்கு நேத்து கல்யாணம்னு பத்திரிக்கை அனுப்பினான், நானும் குடும்பத்தோட போனேன்! அங்க தான் அந்த அதிர்ச்சிய குடுத்தான், அவுங்க உறவுக்காருங்க முன்னால, நீங்க தாலிய எடுத்துகுடுங்க சாருனு சொன்னான், எனக்கு ஒன்னும் புரியல, பெரிய அதிர்ச்சியாவும் இருந்திச்சி, என்னோட மனைவியும் ஒன்னும் புரியாம திகைச்சி நிக்கராங்க, நான் இந்த நிலைமைக்கு வர நீங்க தான் சார் காரணம், நீங்க தாலி எடுத்துகுடுத்து கல்யாணம் பன்னனும்றது என்னோட வாழ்நாள் லட்சியம் சாருனு சொன்னான்.

இதுலா பெரியவங்கதாண்டா செய்யனுனு, அப்படினு எவ்ளோ எடுத்துச்சொல்லியும் கேட்கவேயில்ல,வேற வழியில்லாம நானும், என்னோட மனைவியும் சேர்ந்து தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நல்லபடியா முடிஞ்சது, முடிஞ்சதும் அந்த பையன் என்ன கட்டிபிடிச்சி கதறி அழுதது அங்க இருந்த எல்லோருமே கண்கலங்கிதான் போனாங்க!

நானும் ஒரு ஆசிரியரா உண்மையிலே நிலைகுலைஞ்சிதான் போனேன். ஆண்டுதோறும் பல மாணவர்களை கடந்து வந்தாலும், சிலருக்கு நாம செய்ர சின்ன உதவிகூட பெரிய அளவுல பாதிக்கும் போல, இந்த நிகழ்வு என்ன ரொம்பவே பாதிச்சியிருக்கு. ஒரு ஆசிரியரா இந்த அளவுக்கு
மாணவர்களோட அன்பை பெறுவது உலகத்துல இருக்கிற அத்தனை விருதுகளவிட பெரியதாகவே தோனுது.

இந்த மாதிரி மாணவர்கள் என்னோட பொறுப்பையும், கடமை உணர்வையும் பணி வேகத்தையும் மேலும் மேலும் கூட்டிவிடுவதோட, நேர்மை, காலம் தவறாமையும், தனிமனித ஒழுக்கத்தையும் இன்னும் சிறப்பா கடைபிடிக்க வெச்சிடராங்க.

ஆசிரியர் பணி அறப்பணி என்பத உணர்வுப்பூர்வமா உணர்கிறேன்…
ஆசிரியர் என்பதில் எப்போதும் பெருமைகொள்கிறேன். எப்போதும் என் ஆசிரியர் பணியை நேசிக்கும் – கி.தமிழரசன், பள்ளிகுளம், விழுப்புரம் மாவட்டம்.

இந்த மாணவனுக்கு இனிய திருமண வாழ்த்துகளை கூறி இந்த இவருடைய வாழ்கையை சிறப்பிக்க ஓர் ஆசிரியர் கிடைத்தைபோல இவரும் மற்றவர் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

-தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here