கட்சி தொடங்குகிறாரா ரஜினி…? மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் சூப்பர் ஸ்டார்… முக்கிய அறிவிப்புக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
சமீபத்தில் ரஜினி, தனது பெயரில் வெளியான ஒரு கடிதம் குறித்து தனது உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் உண்மை என்று கூறியிருந்தார். ஆனால் அரசியல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், அவரது ரசிகர்கள் இத்தனை வருட காலம் அவர் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பதாலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 30 ஆம் தேதி ரஜினி இறுதி முடிவு எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.