மதுரையில் கக்கூஸ காணோ! கண்டுப்பிடிச்சுக் கொடுத்தா ரூ.1 லட்சம் பரிசு:

0
333

மதுரை மாவட்டம் கொட்டாப்பட்டி அருகே அரசு சார்பில் கட்டப்பட்ட தனிநபர் கழிவறைகளை கண்டுப்படித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் “தூய்மை இந்தியா திட்டம்” தமிழகத்திற்க்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் இன்று வரை எந்தவித அடிப்படைத் திட்டமும்,  முழுமையாக நிறைவு பெறாமல்  பல கிராமங்கள் இந்தியாவில் உள்ளன்.

இதற்கு சான்றாகவும் , இந்திய அரசாங்கத்திற்கே அவமான சின்னமாகவும் பொட்டப்பட்டி கிராம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம், பூதமங்கலம் ஊராட்சி் பொட்டப்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணக்குக் காட்டி உள்ளனர்.

அங்கு சென்று பார்த்தால், மிகவும் சேதமடைந்த நிலையில் 2,3 சுவர்கள் மட்டும் உள்ளன. மற்றபடி எதுவும் இல்லை. இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டாலும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் முறையாக பதில் அளிக்காமல், மிரட்டுவதாக அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த முறைகட்டை சுட்டிக் காட்டும் விதத்தில், சமூக செயற்பாட்டாளரும்,உதிரத்துளிகள் மக்கள் சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான அசாருதீன் என்பவர் பொட்டப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுகுறித்து சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த சுவரொட்டிகளில், சேதமடைந்த கழிவறைகளின் புகைப்படங்களும், அதனுடன், கடந்த 2016-2017 ஆம் ஆண்டு அரசு சார்பில் கட்டப்பட்ட கழிவறைகளை காணவில்லை என்றும், கருவறைகளை கண்டுப் படித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளருமான அசாருதீன் என்பவர் பொட்டப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுகுறித்து சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து, பல்வேறு செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டும், இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், ஊராட்சி மற்றும் கிராம தலைவர்களும் கண்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்படத்தக்கது.

உடனடியாக தமிழக அரசு இந்த முறைகேடு குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டுமென பொட்டப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here