ஐ.பி.எல். காலவரையின்றி ஒத்திவைப்பு?

0
92

ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் தொடங்க இருந்தது. ஆனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இத்தொடர் வரும் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். தொடர் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

”சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தொடரை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் ரூ. 3000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம். இயல்பு நிலைக்கு திரும்பிய பின், தொடரை எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கலாம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here