எஸ்.பி. பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…!

0
75

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது உடல்நிலை சீராக உள்ளதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால் பிரபலங்கள் மற்றும் அரசு கட்சித் தலைவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் பெற்று நலமுடன் திரும்பி வர வேண்டினர்.

இதற்கிடையில் நேற்று மருத்துவர்களை பார்த்து எனது தந்தை கையசைத்தார். நினைவுடன் உள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மருத்துவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல திரைப் பிரபலங்கள் எஸ்.பி.பி மீண்டு எழுந்து வர கடவுளை பிரார்த்தித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here