ரேபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெளிவாக விளக்கிய பின்னரும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி கிராமத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 5 கிலோ காய்கறி தொகுப்பை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது ரேபிட் கிட் சோதனை கருவி மூலம் அரசியல் செய்ய நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரேபிட் கிட் குறித்து, சரியான விலையை கூறிய பின்னும் ஸ்டாலின் வேள்வி எழுப்புவது அரசியல் ஆதாயத்துக்காக என்று விமர்சித்தார்.