ஊர் விட்டு, ஊர் செல்ல அனுமதி: பேருந்து பயணம்

0
125

மே 20ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ரயில் போக்குவரத்து குறித்து மத்திய ரயில்வே துறை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வில்லை.

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளதால், பொது போக்குவரத்து குறித்து சென்னை மாவட்டத்திற்க மட்டும் கட்டுபாடுகள் ஏற்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டங்கள் ஆகியவை திறக்கப்படும் என்றும் தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த நிலையில் பேருந்து பயணம் எவ்வாறு என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here