ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் ஒயின்ஷாப்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மதுவுக்கு அடிமையான சிலர், வேதிப்பொருள்களை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. மதுக் கடைகள் திறக்காமல் கிடப்பதால், சிலா் கடைகளை உடைத்து மதுப் புட்டிகளை திருடி வருகின்றனா்.
இந்நிலையில் திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்,
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்..