நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.20 முதல் எந்த தொழில்களை எல்லாம் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்.20 முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடு தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கும்.
இந்நிலையில் நாளை முதல் மத்திய நிதித்துறை, ஆயுஷ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சேவைகளும் தொடங்குகின்றன. மேலும் ஏப்ரல் 20 முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
1. ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள்…
2. வேளாண் மற்றும் தோட்டத் தொழில்கள்…
3. மீன்பிடித் தொழில்…
4. தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், தொழில்நுட்பம் சார்ந்த ஐ.டி துறைகள் அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்…
5. நிதித்துறை…
6. சமூக நலத்துறை…
7. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம். இதில் ஊழியர்கள் மாஸ்க் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்…
8. பொது விநியோகத்துறை…
9. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி…
10. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள்…
11. ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூரக் கல்விக்கு அனுமதி…
12. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யலாம்…
13. வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்…
14. கட்டட தொழில்கள்…
15. அரசு மற்றும் தனியார் தொழில்துறைகள்…
16. தனியார் வாகனங்களை அவசர தேவைக்காக இயக்கலாம்…
17. அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்…