ஊரடங்கு காலத்திலும் தனித்துவமாக வளர்ந்த தமிழ் யூடிப்பர்ஸ்:

0
874

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும் முடங்கின. இதனால்,உலகளவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனால், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் பக்கம் எந்தவொரு பாதிப்பை சந்திக்கவில்லை.மக்கள் அனைவரும் வீடுகளிலேயே மூடங்கி இருந்ததால், ஓ.டி.டி மற்றும் யூடிப், பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களின் முழுநேரத்தை செலவிட்டனர்.

இதன் மூலம் ஓ.டி.டி,யூடிப் மூலம் சம்பாதித்தவர்களின் அதிகம் தான்.கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு “5” யூடிப் சேனல் பற்றி காண்போம் : 

ஆராத்தி:Aarathi (சப்ஸ்கிரிபர்ஸ் – 1.7 M) : இந்த யூடுப் சேனல் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் தொடங்கப் பட்டு என்றாலும், கடந்த ஆண்டு தான் அசுர வேகம் அடைச்சுச்சு. அவங்க போடுற எல்லா வீடியோவும் மில்லின் Views-ச தொட்டு இருக்கு. ஆராத்தி சேலின் நாயகி பூர்னிமாவுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்கள எகப்பட்ட ரசிகர் பட்டளமே இருக்கு.அதற்கு காரணம் பக்கா சென்னை பொண்ணா அவங்க நடிச்சு, எல்லாத் தரப்பு மக்களுக்கு ரசிக்கும்படி இருக்கிறது தான். அவங்களோட தற்போதைய வருமானம் மாதம் சராசரியாக 5 லட்சம் இருக்கலாம். தற்போது 1.7 மில்லியன் சப்ஸ்கிரிபர்ஸ்  இருக்காங்க.

 சா பூ த்ரி (Saa Boo Three) சப்ஸ்கிரிபர்ஸ்:  457k ரேடியோ மிர்ச்சியில ஆர்.ஜே-வா இருந்த “ஷா” என்பவர் தான் இந்த சேனலை ரன் பண்ணிட்டு வராரு. இது ஒரு மோட்டிவேஷன் சேனல். வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து சாதித்தவர்களை பற்றி தான் “ஷா”- பேசி வீடியோ போடுவாரு. நடிகர்.யோகி பாபு,சமுத்திரக் கனி, விஜயகாந்த, விஜய் டிவி புகழ் பாலா, கூக்கு வித் கோமாளி -புகழ், சன் மியூசிக் வி.ஜே.ரியோ, யூடிப்பர் கோபி-சுதாகர், எருமசாணி.விஜய் என  பல்வேறு தளங்களில் சாதித்த சாதனையாளர்கள் பத்தி இவர் வீடியோப் போட்டுட்டு வராரு. 4.57 லட்சம் சப்ஸ்கிரிபர்ஸ்  இவர் சேனலோட இணைந்து இருக்குறாங்க.

சேனல் விஷன்(Channel Vision) சப்ஸ்கிரிபர்ஸ் 144k:    தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் விவாத நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர்கள், இரண்டே பேர் தான். ஒருவர் தந்தி டி.வி.ரங்கராஜ் பாண்டே.மற்றொருவர் மதன் ரவிச்சந்திரன்.காவேரி, நீயூஸ்-7,வின் டிவி என சில தொலைக்காட்சிகளில் வேலைப் பார்த்த மதன் ரவிச்சந்திரனை முதன்மை ஆளா இல்லை முதன்மை பொருளாக வச்சுத் தொடங்கப்பட்ட யூடிப் சேனல் தான் “சேனல் விஷன்”.

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் விவாத நிகழ்ச்சியை போல விருத்தினர், பேச்சாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உடன் யூடிப்பில் மதன் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவர், இந்த சேனலில் இருந்து விலகிய பிறகு, தற்போது, கிஷோர்.கே.சுவாமி என்ற நபர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனா, இதில் முக்கியமான விசயம் என்னென்னா? இவங்களுடைய எல்லா வீடியோவிலும் comments Section Off-ல தா இருக்கும். காரணம் மக்கள் கழுவி,கழுவி் ஊத்தியது தான் என நெட்டிசன்கள் சொல்லுறாங்க.

இந்த சேனல் ஒரு பக்கா இந்துத்துவா மற்றும் திமுக,திருமாவளவனை மட்டும் விமர்சிக்கும் சேனல் என்று  தங்களோட ஒவ்வொரு வீடியோவிலும் நிரூபிச்சுட்டே இருப்பாங்க.

எண்ணுவதெல்லாம் உயர்வு (Ennuvathellam Uyairuv): சப்ஸ்கிரிபர்ஸ் – 210k. இதுவும் ஒரு மோட்டிவேஷன்  யூடிப் சேனல் தான்.*புக் ரீவியூ, *ஆடியோ சக்சஸ் ஸ்டோரி,*சாதித்தவர்களின் வாழ்க்கை கதை,* பெரும் உலக மற்றும் இந்திய பணக்காரர்கள் என பல ப்ளே லிஸ்ட்களை உருவாக்கி. வாரத்திற்கு மூன்னுல இருந்து ஐந்து வீடியோ ஆப்லோட் பண்ணுறாங்க.இந்த சேனல் ஹேட் ஜே.ஆர் என்பவர் தான்.இந்த ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து வீடியோ போட்டு தொடர்ந்து அசத்திட்டு வராரு, ஜே.ஆர். திருபாய் அம்மாணி,தோஷா ப்ளாஷா உரிமையாளர் பிரேம் கணபதி,மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் பாலன், ராம்ராஜ் காட்டன் ஆடையகத்தின் உரிமையாளர் ரங்கராஜ் என உள்ளூர் முதல் உலகளவில் பெரும் சாதனையாளர்கள் மற்றும் பணக்காரர்களை பற்றிய ஒரு நீண்ட அருமை தொகுப்பை வீடியோ வடிவில் காட்சிப்படுத்தி நெட்டிசன்களுக்கு விருந்தளித்து வருகிறார்,ஜே.ஆர்.

எம்டி ஹேண்ட் (Empty Hand : சப்ஸ்கிரிபர்ஸ்- 366k இது ஒரு அடல்ட் யூடிப் சேனல். சினிமா பாடல்களில் உள்ள டபுள் மினீங் வார்த்தைகள்,யூடிப் தொகுப்பாளரான கலாட்டா பார்வதி போன்ற அடல்ட் தொகுப்பாளர்களின் டபுள் மினீங் வசனங்களை வச்சு செய்வது இவரது வீடியோவின் சிறப்பு. என்னதா டபுள் மினீங் அடல்ட்-க்கான வீடியோவா இருந்தாலும் யூடிப்பில் இவர் வீடியோ பிரபலம்.முகநூலில் கூட எம்டி ஹேண்ட் சேனல் வீடியோ தான், வைரலாகிட்டு் இருக்கு.தற்போது 1.7 மில்லியன் சப்ஸ்கிரிபர்ஸ்  இருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here