ஊரடங்கில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு விலக்கு…!

0
229

ஊரடங்கில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது…!

கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்க அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீன்பிடிப்பு, மற்றும் மீன்வளர்ப்ப தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது அதன்படி மீனவர்கள் கடலுக்கு செல்லவும், மீன்களை விற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடி சார்ந்த விற்பனை செய்தல், பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மீன்கள் விற்பனையில் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here