உறியடி விஜயக்குமார் பாணியில் ஜெயித்த “அகலிகை” பட இயக்குநர்- இளம்பெண்களின் அமோக ஆதரவு :

0
1637

பெண்களை பற்றி யாரும் தொடாதக் கதைக்களத்தை தேர்வுச் செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார் இளம் இயக்குநர்.பிரபாகரன்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு,வெற்றியும் அடைந்து வருகிறது.

அந்தவகையில் “அகலிகை” என்ற படம் இளம்பெண்களை பற்றிய கதைக்களத்தைக் கொண்டு் எடுக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இளம்பெண்கள் சந்திக்க கூடிய பிரச்னைகள், ஆண்களின் பார்வையில் பெண்கள் எப்படி? என்பதையும், பெண்கள் ஆண்களை எப்படி பார்கிறார்கள்? பழகுகிறார்? என்பதை மற்ற படங்களை காட்டிலும் மிக தெளிவாக காட்டியுள்ளார் படத்தின் இயக்குநர்.பிரபாகரன்.

“திரௌபதி” என்ற படம் பெண்ணை பற்றிய படம் என்றாலும் சாதிய ரீதியாக மக்களால் பார்க்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடினர்.

அகலிகை படத்தின் இயக்குநர். பிரபாகரன் சாதி, அரசியல்,மதம் என எந்தவொரு அடையாளங்களும் இல்லாமல் இளம்பெண்களை மட்டும் சார்ந்தே படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

உறியடி படத்தில் நாயகன்,இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சுமைகளை தோலில் சுமந்து வெற்றியடைந்தவர் “விஜயக்குமார்”. அவரின் பாணியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் தற்போது, திரைத்துறையில் களமிறங்கி வெற்றிக்கண்டுள்ளார்.

தற்போது, வேலைச் செல்லும் பெண்கள், இல்லதரசிகள், இளைஞர்கள், ஆண்கள் என எல்லாத் தரப்பு மக்களும் “அகலிகை” படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளரும் பிரபாகரன் என்பதால் இப்படிப்பட்ட கதைகளத்தை தேர்வுச் செய்து அதில் சாதித்தும் காட்டியுள்ளார்.

இளம் இயக்குநர், தயாரிப்பாளர் பிரபாகரன் உட்பட திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இளைஞர் பட்டாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெகு விரைவில் அகலிகை படம் திருச்சி, மதுரை, தேனி,நெல்லை உள்ளிட்ட தென்தமிழகத்திலும் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here