உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

0
159

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி கண்ணம்மாள், சாதிகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், நக்கீரன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. தற்போது காலிப் பணியிடங்கள் 12ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here