நம்ம முகத்தில் மிக அழகான பகுதி இந்த லிப்ஸ் தான். அதனார தான் பெண்கள் லிப்ஸ அழகா வச்சுக்கப் பார்ப்பாங்க. ஆனா,சில காரணங்களால் லிப்ஸ் கருப்பா மாற நிறையவே வாய்ப்பு இருக்கு. நீர் சத்துகள் குறைவது,சூரியக் கதிர்களின் வீச்சு, வைட்டமின்-சி குறைபாடு,புகைப்பிடிப்பது,மட்டமான லிப்ஸ்டிங்களை பயன்படுத்துவது இந்த மாதிரியான சில காரணங்களால உதடுகளோட அழகு பாதிக்கப்படுது.
வீட்டில் இவருக்கும் எளியப் பொருட்களை வைத்து உதட்டை எப்படி பிங் நிறத்தில் மாற்றுவது குறித்து பார்ப்போம்
- நறுக்கி தக்காளி,சிறிது நறுக்கி பீட் ரூட் தூண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து ஜூஸ் தயாரிக்க வேண்டும்.ஜூஸை எடுத்துக் அரை டீஸ் ஸ்பூன் தேனுடன் சேர்ந்து இரவில் உதட்டில் தடவி 20 நிமிடங்கள் உளர வைக்க வேண்டும்.பின் சுத்தமாக கழுவ வேண்டும். 7 நாள்கள் இரவில் இதனை தொடர்ந்து செய்து வந்தால் உதடு பிங் நிறத்தில் மாறிவிடும்.
- எழும்பிச்சை பழந்தை புளிந்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்,அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சக்கரையை சேர்ந்து நன்கு கலக்க வேண்டும். பின் உதட்டில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நாளில் 2-முறை இவ்வாறு செய்து வந்தால், 5 நாட்களில் உதடு பொழிவுப் பெறும்.
- நிறுக்கிய பீட் ரூட்டை ப்ரிட்ஜில் வைக்க வேண்டும், குளிர்ந்த பீட் ரூட்டை எடுத்து உதட்டில் வைத்து தேய்க்கவும், பின் தேன்-ஐ எடுத்து உதட்டில் தடவும் 20நிமிடம் இப்படியே செய்தால் போதும். ஒரே வாரத்தில் அழகிய உதடு நம்மிடம்.
- ஆரஞ்சு பழத்தோழை மட்டும் எடுத்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பின் அதனை, மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன் கலந்து, உதட்டில் காலை மற்றும் இரவு என இரு வேளை செய்து வந்தால் ஒரு வாரத்தில் பிங் நிற உதடு நமக்கு கிடைக்கும்.
மேற்கூறிய டிப்ஸ்களை ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.நல்ல பலன் கிடைக்கும்.