ஈரோட்டில் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திய டிரைவர் கைது

0
437

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மைனர் பெண்ணை திருமண ஆசை  காட்டி கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப் பட்டார்.

கைது செய்யப்பட்ட மாதேஷ், அந்தியூர் பி.கே. புதூர், கண்ணப்பள்ளி, செல்லாயூர் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மகன். டிரைவர் வேலை பார்த்து வரும் இவர், இதே பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த 16-ஆம் தேதி வீட்டிலிருந்து அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காத நிலையில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர. இது குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் தேவேந்திரன் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி, பவானி பேருந்து நிலையத்தில் இருந்த இருவரையும் பிடித்தனர்., விசாரணையில் மாணவியை கடத்திச் சென்றது உறுதியான அடுத்து மாதேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here