இளைஞர்களின் களமாக மாறும் 2021 விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: மெகா சர்வேவின் முடிவு வெளியிடு

0
290

தமிழகத்தில், வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.

பல்வேறு ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து கள நிலவரத்தை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

ஒரு தனியார் அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் “விளாத்திகுளம்- சட்டமன்ற தொகுதி”யில் மக்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கடந்த ஒரு வாரமாக மாபெரும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. சுமார் 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இணையத்தள வாயிலாகவும், நேரடியாகவும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் 80 சதவீதிற்கும் மேல் இளைய தலைமுறை வேட்பாளருக்கே மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.


சர்வே முடிவு:

விளாத்திகுளம் தொகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் அரசு பள்ளி, தரமான மருத்துவமனை, சாலை வசதி உள்ளிட்ட நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளன. இவையெல்லாம் செய்ய படித்த மற்றும் துடிப்பான இளைஞர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் நிதி தொகை சரியான வழியில பயன்படுத்தி, பல்வேறு பணிகள் மேற்கொள்வார்கள் என கருத்து தெரிவித்தனர்.

விளாத்திகுளம் தொகுதியில் பெருவாரியான மக்கள், பட்டத்தாரி இளைஞர்களே தங்கள் தொகுதி வேட்பாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வர விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இந்த கருத்து கணிப்பின் முடிவை
கவனத்தில் கொண்ட, அரசியல் கட்சிகள் மற்றும் விளாத்திகுளம் தொகுதி அரசியல் பிரமுகர்கள், பட்டதாரி இளைஞர்களேயே தங்கள் கட்சியின் வேட்பாளராக இருந்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து மறைமுகமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சிகள்
இளைஞர்களுக்கு அதிகயளவில் வாய்ப்பு வழங்க உள்ளதாக வெளியான தவகல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here