இளம்பெண்களிடம் அத்துமீறும் தமிழ் யூடிப்பர்ஸ் :

0
183

யூடிப்பர்ஸ் என்ற பெயரில் சமீப காலமாக இளம்பெண்களிடம் ஆத்துமீறும் செயல்கள் தொடர்கின்றன.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொழுது போக்குகாக வரும் இளம்பெண்களை வழிமறித்து அவர்களை கட்டாயப்படுத்தி் அபாச கேள்விகள் கேட்டு, யூடிப்பர்ஸ் தொந்தரவு செய்து வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் “சென்னை டாக்” என்ற யூடிப் சேனலை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர்.

சமீபத்தில் ஒரு இளம்பெண்களிடம் கேள்வி கேட்டு, அதற்கு அப்பெண் மிகவும் அபாசமாக “நான் மூன்று பேருடன் பண்ணுவேன், உனக்கு என்ன?” என்று அசால்டாக பேசும் வீடியோ தற்போது வரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கெல்லாம் மொத்தமாக சேர்ந்து, சென்னை அடையார் துணை ஆணையர் விக்கிரமன் – “சென்னை டாக்” யூடிப் சேனல் தொகுப்பாளர் “அசன் பாதுஷா”, கேமரா மென் “அஜய் பாபு”, சம்பந்தப்பட்ட யூடிப் சேனல் உரிமையாளர் ” தினேஷ் குமார்” ஆகியோரை கைது செய்தனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம்,பெண்களைத் தவறாக பயன்படுத்துதல் என 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

“சென்னை டாக்” போன்ற பல்வேறு யூடிப் சேனல்கள் காசு பார்க்கும் நோக்கத்துடன், “அடல்ட்” வீடியோகளை எடுத்து அதனை யூடிப்பில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆண் தொகுப்பாளர்கள் தான் இளம்பெண்களிடம் வம்படியாக இழுத்துப் பிடித்து “உங்க பாய் ப்ரண்டோட எங்க போவீங்க?” “உங்க லவ்வர் பத்தி சொல்லுங்க?” “நீங்க தனியா இருக்கும் போது என்ன பண்ணுவீங்க” –னு படும் கேவலமான கேள்விகளை கேட்கின்றனர் என்று பார்த்தால், பெண் தொகுப்பாளர்கள் அதைவிட கேவலமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிலும்,குறிப்பாக “கலாட்டா” யூடிப் சேனலின் தொகுப்பாளர் “பார்வதி” ஆண்களிடம் வரம்பு மீறி நடந்துக் கொள்வதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யார் வேண்டுமாலும் யூடிப் சேனல் தொடங்கலாம் என்ற நிலை உள்ளதால் ஏகப்பட்ட யூடிப் சேனல்கள் உருவாகி உள்ளன. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய பேர் தங்கள் யூடிப் சேனலை தொடங்கி,நடத்தி வருகின்றனர். நன்கு பணம் சம்பாதித்து விடலாம் என்ற நோக்கத்தில் யூடிப் சேனல்கள் எங்கெங்கோ உருவாகின்றன.சிலர் நல்ல ஊதியம் பெறும் வேலையில் இருந்தாலும், அந்த வேலையை விடுத்து யூடிப் சேனல் பக்கம் திரும்பி உள்ளனர். இளம்பெண்கள் மற்றும் இளம் ஆண்களின் அந்தரங்க விசயங்கள் பற்றிய நிறைய தமிழ் யூடிப் சேனல்களில் வீடியோகள் உலாவி வருகின்றன. இதனால் யாருக்கும்,அந்த பயனும் இல்லை,நம் சமூகம் தான் சீரழியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சினிமா குறித்த தகவல்கள் மற்றும் திரைத்துறையினர் சார்ந்தவர்களின் தகவல்களை வீடியோவாக வெளியிடும் யூடிப் சேனல்கள் முற்றிலும் அல்லது முக்கால்வாசி தவறான தகவல்களை பதிவிடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கல்வி சார்ந்த பல விசயங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல விசயங்கள் இருந்தாலும் யூடிப்பில் பெரிதும் ஆக்கிரமித்து உள்ளது என்னவோ இது மாதிரியான கேவலமான யூடிப் சேனல்கள் தான்.

சமூக அக்கறை யூடிப்பர்ஸ்-க்கும் இருக்க வேண்டும் என்று யூடிப்பை பயன்படுத்துவோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here