இயக்குநர் முத்தையா மீது பண மோசடி புகார்: தகாத வார்த்தைகளில் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

0
2703

சென்னையில் வீடு வாங்குவது தொடர்பாக நூலவர் ஒருவரை ஏமாற்றியதாக இயக்குநர் முத்தையா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை கே.கே  நகர் பொன்னம்பலம் சாலையில் நூல் நிலையம் வைத்து நடத்தி வருபவர் சக்திவேல். கடந்த 30 ஆண்டுகளாக நூலகம் மற்றும் நூல் அச்சு வேலையில் ஈடுபட்டு வரும் இவருக்கும், இயக்குநர் முத்தையாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இயக்குநர் முத்தையாவுக்கு வீடு, இடங்கள் ஒத்திக்கும், சொந்தமாகவும் வாங்கி கொடுக்கும் இடைத் தரகரா சக்திவேல் செயல்பட்டு வந்தார்.

இயக்குநர் முத்தையாவுக்கு, கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன் சென்னை கே.கே. நகர் ராமசாமி  சாலையில் உள்ள ஒரு பிளாட்-ஐ 82 லட்ச ரூபாய்க்கு பேசி முடித்ததாக சக்திவேல் கூறுகிறார்.

மேலும், டாக்குமெண்ட்ஸ் சார்ஜ் என 12,000 ரூபாய் பணத்தை தான் செலவு செய்ததாவும் சக்திவேல் கூறுகிறார்.

ஆனால், பிளாட்-ஐ தன்னோட பெயருக்கு மாற்றிய பின், முத்தையா தன்னை கண்டுக் கொள்வதில்லை என்றும், தனக்கு வர வேண்டி கமிஷன் தொகை மற்றும் செலவு செய்த 12,000 ரூபாய் பணத்தையும் திரும்பி தரவில்லை என்றும் சக்திவேல் குற்றம்சாட்டுகிறார்.

பணம் குறித்து கேட்டால்,தன்னை தகாத வார்த்தைகளில் இயக்குநர் முத்தையாவும், அவரது மேலாளரும் மிரட்டுவதாக அச்சம் தெரிவித்தார்.

இதனால் காவல்துறைக்கும் செல்ல முடியாமல் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கிறார் சக்திவேல். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here