நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் இந்து மத கடவுள் குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நாகராஜன் கூடங்குளம் சிங்காரதோப்பை சேர்ந்தவர். இவர் மீது நெல்லை கிழக்கு மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு என்பவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நாகராஜன் என்பவர், இந்து கடவுள்களை அவமதித்தும், ஆபாசமாக சித்தரித்தும், முகநூலில் கருத்துகள் பதிவிட்டுள்ளதாக தெரிவித்தார்.இது இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக குறிப்பட்டார். இந்த புகாரின் பேரில், கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டனி ஜெகதா, நாகராஜனை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.