இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

0
701

இந்தியாவின் லடாக்கில், ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகின் 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை 1,93,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,865 பேர் பலியாகி உள்ளனர். 81,743 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் லடாக்கில் பணி அமர்த்தப்பட்ட ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது தந்தை கடந்த பிப்ரவரி மாதம், ஈரானில் இருந்து இந்திய திரும்பி உள்ளார். அவருக்கு மார்ச் 6-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த ராணுவ வீரரின் மனைவி, இரண்டு குழந்தைகள், சகோதரி ஆகியோரும் தனிப் பிரிவில் கோவிட்-19 எனப்படும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here