இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 53,322 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18.62 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:
- நாட்டின் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 25.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 18.62 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 6,77,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 71.91% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
- இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 7,46,608 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,93, 09,703 ஆக அதிகரித்துள்ளது.