இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

0
89

சென்னையில் இன்று பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஷங்கர், நடிகர்.கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போது கமலஹாசன்,இயக்குநர் ஷங்கர்,லைகா நிறுவனத்தினர் ஆகியோர் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தனர்.

இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட சேட் அமைக்கப்பட்டு சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே நடைபெறத்து.கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இன்று நள்ளிவரவு படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக படத்தின் கதாநாயகன் நடிகர். கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவரும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அப்போது தெரிவித்தனர்.ஆனால்,படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தங்கள் தரப்பில் இருந்து நிதி உதவி குறித்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர்.கமலஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தங்கள் தரப்பில் அறிவித்தது படி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.அதேசமயம் லைக்கா நிறுவனம் தரப்பில் உயிரிழிந்த குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்ட சம்பவம், சினிமா வட்டார மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here