ஆரோக்கிய சேது செயலி வெளியான 13 நாட்களில் 5 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது.
மத்திய அரசும்- ஆரோக்கிய சேது செயலியும் : மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.இதனை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய செயலி மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும்.
செயல்பாடு : இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.
ஒரு செயலி இணையத்தில் அல்லது ஆண்டிராய்டு மொபைல் ஃபோனில் வந்த உடன் அதிக இந்தியர்களால் டவுன்லோடுகள் செய்யப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.
ஆரோக்கிய சேது செயலி வெளியானது முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.