ஆப்பிள் வாட்சிற்கு பதில் கற்கள் – ஆன்லைனில் ஏமாந்த பிரபல இசையமைப்பாளர்…!

0
14

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளம் சாம் சி.எஸ். விக்ரம் வேதா, கைதி, இஸ்பேட்ட ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இணையதள வணிகமான ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் கூறியதாவது: எனது சகோதரனுக்கு பிறந்தநாள் பரிசளிக்க ஆன்லைனில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்திருந்தேன். அழகாக பேக்கிங் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதை பிரித்து பார்த்தபோது உள்ளே கற்கள் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினடம் புகார் அளித்தோம். ஆனால் எங்களது பணத்தை திருப்பி தர முடியாது என கூறிவிட்டனர். தயவு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி ஏமாறாதீர்கள் என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here