ஆபாச டிசைனில் கேக் வடிவமைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகை மீது கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்…!

0
43

ஆண் உறுப்பு டிசைனில் வடிவமைக்கப்பட்ட கேக்கை வைத்து பிறந்தநாள் கொண்டாடிய நடிகையை சமூக ஆர்வலர்கள் கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர். பிரபல டிவி நடிகை நியா ஷர்மா சினிமாவுக்காக தனது பெயரை நேகா ஷர்மா என மாற்றிக் கொண்டார். 2010ஆம் ஆண்டு வெளியான காளி – ஏக் அக்னிபரிக்ஷா என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

வெப் சீரிஸ் மற்றும் இந்தி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக உள்ள நியா ஷர்மா, டிவிஸ்ட்டடு, ஜமாய் ராஜா 2.0, டிவிஸ்ட்டடு சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சின்னத் திரையை பொறுத்தவரை பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் நியா ஷர்மா. இந்நிலையில் நடிகை நியா ஷர்மா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ஒரு வீடியோவில் ஆணுறுப்பு டிசைனில் கேக் உள்ளது. இந்நிலையில் நியா ஷர்மா ஷேர் செய்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக விளாசியுள்ளனர். பிறந்த நாள் கேக் கேவலமாக உள்ளது என்றும், உங்களின் ரசனை ரொம்ப மோசம் என்றும் திட்டி தீர்த்துள்ளனர்.

இன்னும் சிலர் எண்ணங்கள் கீழ்த்தரமாக உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்று சிந்திக்க முடியும் என்றும் விளாசியுள்ளனர். மேலும் இவ்வளவு ஆபாசம் நிறைந்த இந்த வீடியோவை நீங்கள் இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்க கூடாது என்றும் இதுபோன்ற செயல்பாடுகளால் உங்கள் மீதான மரியாதையை இழந்து விடாதீர்கள் என்றும் தங்கள் ஆதங்களை கொட்டித் தீர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here