ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அலட்சியமாக கையாண்ட நகராட்சி ஊழியர்கள்

0
36

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவரின் உடலை ஜேசிபி எந்திரத்தில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலசா நகரில் வசித்து வரும் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை வீட்டில் இருந்து ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் சுடுகாட்டிற்கு நகராட்சி ஊரியர்கள் எடுத்துச் சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறந்தவரின் உடலை அவமதித்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மரியாதைக்குறைவாக கையாளுவது வேதனை அளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here