வந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார் மத்திய உள்துறை அமைச்சர். ஷாவின் அரசியல் சூழ்ச்சிகளை இந்த அதிமுக பொறுப்பாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை…!
இந்த அதிமுக அ…மைகளுக்கு முதலில் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது
1) சசிகலா இருக்கும் அதிமுக
2) சசிகலா இல்லாத அதிமுக
சசிகலா இல்லாத அதிமுக தான் வேண்டும் என விரும்பிய இந்த அ..மைகள் ஷா சொல்வதற்கு முன்னாலேயே முந்திக்கொண்டு கூட்டணி தொடரும் என அறிவித்தார்கள். பின்னால் பேசிய அமைச்சகம் அதை ஏற்றுக்கொண்டு அவரும் கூட்டணி தொடரும் என அறிவித்தார்.
இந்த அ…மைகள் நினைக்கலாம் சசிகலாவை வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டோம் என… ஆனால் இனி நடக்கப் போவது என்னவென்றால்… ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் ஷா அதிமுகவை மீண்டும் இரண்டாக உடைப்பார். உடைத்த ஒரு பகுதியை பாஜக உடன் இணைத்து விடுவார்
இரண்டாக உடைந்த உடன் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால்… களத்தில் உதய சூரியனும், தாமரையும் தான் களத்தில் இருக்கும் இரட்டை இலை என்ற சின்னம் தேர்தல் களத்தில் இல்லாமலேயே செய்துவிடுவார்கள். அது தான் மத்தியில் உள்ளவர்களின் சூழ்ச்சி.
வாக்குகளை சிதறடிப்பதற்காக பிஜேபியின் B team ங்களான கமலஹாசன், டிடிவி நாம்தமிழர்ரகளையும் தயார் செய்துவிடுவார்கள். அமித்ஷா போடும் திட்டம், 2021 தேர்தலிலேயே களத்தை திமுக vs பாஜக என அமைக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் இது தெரியாமல் விளக்கை தேடும் விட்டில் பூச்சிகளாக இந்த அடிமைகள் விழுந்துவிட்டனர் என்றே தெரிகிறது
உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகளும், ஜெயலலிதாவின் விசுவாசிகளும் தான் இந்த அரசியல் ஆட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாக போகிறவர்கள்.
பொறுத்திருந்து பாருங்கள் இது நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது
இது தேர்தல் களம்…!