அஜித்தை வாழ்த்த #NanbarAjith ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிய விஜய் ரசிகர்கள்

0
567

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அஜித்துக்கு வாழ்த்து கூற விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களும் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். 

#NanbarAjith என்ற ஹேஷ்டேக் உருவானதற்கு காரணம் விஜய் தான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாஸ்டர்  இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார். நண்பர் அஜித்தைப்போல் வரலாம்னு தான் கோட் சூட்ல வந்தேன் என விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here