“அச்சமில்லை,அச்சமில்லை…. என்ற பாட்டுடன் சிஏஏ போராட்டம்

0
613

அச்சமில்லை அச்சமில்லை” பாரதியின் பாடலோடு நடைபெற்ற மயிலாப்பூர் ஷாஹீன் பாக் போராட்டம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என போராட்டகாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து மயிலாப்பூரிலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடத் துவங்கியுள்ளனர். மார்ச் மாதம் 6ம் தேதி துவங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மயிலாப்பூர் ஜும்மா மசூதிக்கு பின்னால் இருக்கின்ற இடத்தில் மேலே கூரை  அமைக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தங்களுக்கான இடத்தில் அமர்ந்து மிகவும் அமைதியாக தங்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

டெல்லி,சென்னை -போராட்ட களம்:

மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆருக்கு எதிராக டெல்லியின் ஷாஹீன்பாக் முதலில் போராட்ட களமாக மாறியது. பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் தங்களின் குரல்களை சி.ஏ.ஏவுக்கு எதிராக  எழுப்பினார்கள். அதன் பின்பு இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களால் முன்னெடுக்கபட்டு, இந்துக்களும் ஓரிரு இடங்களின் தங்களின் ஆதரவுகளையும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் என்று எடுத்துக் கொண்டால் வண்ணாரப்பேட்டையை தான் குறிப்பிட வேண்டும். வண்ணாரப்பேட்டை ஷாஹீன்பாக் என்று பெயர் பெற்ற இடம், காவல்துறையின் அத்துமீறல்களால் சில நாட்கள் கலவர பூமியாகவும் காட்சி அளித்தது. ஆனாலும் அங்கு போராட்டக் குரல்கள் ஓய்ந்த பாடில்லை இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here