அக்ஷரா கமல்ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”

0
12

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ‘விவேகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன். இவர் தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் பாடகி உஷா உதுப், மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது. எங்கள் படம் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்தப் படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here